ஏழு குதிரைகள் இருக்கும் படத்தை வீட்டில் மாட்டி வைத்தால் எப்படிப்பட்ட தரித்திரமும் நீங்கி செல்வம் கொழிக்கும்!
அது என்ன படம் என நீங்களும் தெரிந்து கொள்ளணுமா ? ஒரு சிலபடங்களுக்கு அந்த இடத்தில நேர்மறை ஆற்றலை கொடுக்கும் சக்தி உண்டு. சில படங்களுக்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. அந்த மாதிரியான படத்தை உங்கள் வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பதால் அதிர்ஷ்டத்தை பல மடங்கு பெருகும். அந்த வகையில்எப்படிப்பட்ட பீடையும் - தரித்திரமும் விலகி வீட்டில் செல்வவளம் உண்டாக செய்ய கூடிய இந்த படம் எந்த வகையில் விசேடமானது? அப்படியானால் அது என்ன படம்? என்றதை தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள். சுக்கிரன் சூரியனின் வாகனமாகவும் இருப்பது வெள்ளை குதிரைகளகும் .
7 குதிரைகள horse பொருத்தப்பட்ட வாகனத்தில் சூரிய பகவானும் - வெள்ளை குதிரையில் சுக்கிர பகவானும் எமக்கு அருள் புரிகின்றார்கள். விநாயகருக்கு யானை விசேடமானது போன்று வாழ்வில் செல்வம் பெறுக வெள்ளை குதிரை மிகவும் விசேடமானது. ஆகவே குதிரையில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறார். 7 குதிரைகள் பொருத்தப்பட்ட ரதங்களில் வளம் வரும் சூரிய பகவான் நமக்கு அனைத்து வளங்களையும் கொடுக்க கூடியவர்.
இல்லற வாழ்வில் இனிமை காண சுக்கிரபகவானின் அருள் வேண்டும். களத்திரகாரனாக விளங்கும் சுக்கிரனுடைய அருள் இல்லாமல் நல்ல மனைவியும்- நல்ல கணவனும் ஒருகாலமும் அமைவது இல்லை. இல்லத்தில் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படவும் , பெண்களுக்கு மனதுக்குப் பிடித்த வரன் அமையபெறவும் ஆண்களுக்கு நல்ல குணமுடைய மனையாள் அமையவும் சுக்கிரனை வழிபட்டால் நல்ல பலன் கைகூடும் .இதுபோன்று அவருடைய வாகனமாக குதிரைகள் உருவம் இருக்கும் படத்தை வீட்டில் மாட்டி வைப்பது இன்னும் சிறந்த பலன்களை தரும். ஏழு குதிரைகள் இருக்கும் படங்கள் அதிர்ஷ்டமான உருவங்களாக கூறப்படுகிறது. அது போன்று வெள்ளைக்குதிரை பொறிக்கப்பட்ட படத்தை மாத்திரம் மாட்டி வைத்தாலும் அதிர்ஷ்டம் கூடும். காலையில் எழும்பியதும் முதல் வேலையாக நம் நமது உள்ளங்கையை பார்த்து எழும்புவது வழக்கம்.
நமது உள்ளங்கையில் அஷ்டலட்சுமிகளும் வாசிப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. எனவே உள்ளங்கையை பார்த்த பின்னர் நித்திரையில் இருந்து எழுவது அன்றைய தினத்தை அதிர்ஷ்டமான நாளாக மாற்றும். அதன் பின்னர் நாம் அந்த7 குதிரைகள் ஓடுவது போன்ற படம் இல்லாவிட்டால் வெள்ளைக்குதிரை உருவம் பொறித்த படத்தை பார்த்துவிட்டு அன்றாட வேலைகளை ஆரம்பித்தால் அன்றைய நாள் முழுதும் வீட்டில் மன மகிழ்ச்சியும் - வியாபாரம் - தொழில் ஆகியவற்றில் நல்ல விருத்தியும் உண்டாகும் என்றது ஆன்மிக நம்பிக்கை.
வீட்டின் வரவேற்பறையில் கிழக்கு - தென்கிழக்கு - வடக்கு போன்ற திசைகளில் எல்லோருடைய பார்வைக்கும் தெரியும் படியாக குதிரையின் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் அதிர்ஷ்டத்தை அந்த வீட்டில் செல்வம் பெருகும் .
வீட்டில் ஒரு மிருகங்கள் வேட்டையாடுவதை போன்ற படங்களை வீட்டில் வைக்க கூடாது. இந்த படங்கள் கெட்ட அதிர்வலைகளை உண்டாக்கி வீட்டில் இருப்பவர்களுக்கு சண்டை சச்சரவு -பணக்கஷ்டம்- நோய்போன்றவற்றை உண்டாக்கும்.
- மகாலட்சுமியின் படம்
- வாத்தியக் கருவிகளின் படம்
- குதிரை படம் -- கழுதை படம்
- கோமாதா
போன்ற படங்களை வீட்டின் வரவேற்பறையில் எல்லோர் கண்களிலும் படும்படி மாற்றி அமைப்பது எத்தகைய எதிர்வலைகளையும் மற்றும் தரித்திரத்தையும்முற்றாக நீக்கி விடும்.
கருத்துரையிடுக
எனது வளைதளத்துக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி