துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு வலி? உண்மையான வாழ்க்கை போராட்டம் | Life Struggles Story in Tamil | Women Empowerment

 

துணை இல்லாமல் வாழ்வது – இதயத்தை நொறுக்கும் ஒரு நிஜக் கதை | Life Struggles | Women Empowerment
துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு வலி? உண்மையான வாழ்க்கை போராட்டம் | Life Struggles Story in Tamil | Women Empowerment

துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டமோ, அதை ஒவ்வொரு நாள், ஒவ்வொரு கணமும் இந்த வாழ்க்கை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கை எனும் பயணத்தில் நம்பிக்கை நம்மை முன்னே கொண்டு செல்லும், ஆனால் சில சமயம் அந்த நம்பிக்கையே நம்மை வலி கொடுக்கிறது.

எனக்கு அம்மா–அப்பா இல்லாததால், என் அண்ணன் தம்பிதான் என்னை பார்த்து நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் என் கணவருக்கு வேலை இல்லாமல் ஆறு மாதம் போய் விட்டது. Family Issues, Relationship Problems, Marriage Life Struggles போன்ற சவால்கள் அப்போது தொடங்கின.

என் அண்ணன் தம்பி அவர்களோ, "உன் கணவருக்கு வேலை இல்லை, பொறுப்பு இல்லை, விவாகரத்து வாங்கி விடு" என்று வற்புறுத்த ஆரம்பித்தார்கள். நான் அவர்களிடம், “வேலை கிடைத்துவிடும், வாழ்க்கை சரியாகி விடும்” என்று சொல்லியும் பயனில்லை.

“இனிமேல் அவனுக்கு பொறுப்பு வரப்போவதில்லை, விவாகரத்து செய்து விடு” என்பதே அவர்களின் முடிவு.

வீட்டைப் பற்றி அவர்கள், “நமக்கு இரண்டு வீடு இருக்கு, ஓர் வீட்டில் நீயே இருக்க” என்று சொன்னார்கள். நானும், “அண்ணன் தம்பி நமக்கு துணை நிற்பார்கள்” என்பதில் நம்பிக்கை வைத்து விவாகரத்து செய்து விட்டேன். இதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு என இன்று உணர்கிறேன்.

பகலில் எல்லாம் நன்றாக இருந்தாலும், இரவு தோறும் ஒரு வெறுமை, ஒரு தேடல், ஒரு அழுகை.

READ MORE:  இதய பைபாஸ் அறுவை சிகிச்சை 

காலம் சென்றது…
அண்ணன் தம்பிக்கு திருமணம் ஆகிவிட்டது.
அவர்களுடைய மனநிலை, நடத்தை, பொறுப்பு—அனைத்தும் மாறிவிட்டது.
ஒரு நாள் “வெளியே போ” என்று அவர்கள் சொன்னனர்.
நானும் மனம் நொந்து அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

வெளியேறும் நேரத்தில் கூட “இரு… எதற்காக போகிறாய்?” என்ற ஒரு வார்த்தையை கூட யாரும் சொல்லவில்லை. அந்த ஒரு நொடிதான் மனித வாழ்க்கையின் மிகப்பெரிய பாடமாகி விட்டது.

10 வருடங்களுக்கு பிறகு,
“கணவருடன் மீண்டும் வாழலாமா?” என்று நான் நினைக்கும் போது,
அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதாகத் தெரிந்தது.

அண்ணன் தம்பியின் வார்த்தையை கேட்டு அவசரமாக எடுத்த என் முடிவு—
இன்று என் வாழ்க்கையை தனிமையாக்கிவிட்டது.

READ MORE: தலையணை இல்லாமல் தூங்கினால்...

இப்போது நான் சம்பாதிக்கிறேன்.
ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும், தனிமையை சமாளிக்க முடியாது.
Loneliness, Mental Health, Depression, Single Life Struggles — இதை அனுபவிப்பவர்களுக்குத் தான் உணர முடியும்.

தனிமை என்பது ஒரு கொடுமை.
அந்த வேதனையை நான் தினமும் அனுபவிக்கிறேன்.

அதனால் தான் இன்று இந்த வரிகளை எழுதுகிறேன்:

ஏதேனும் பெரிய முடிவு எடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்கவும்.
அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு அவசர முடிவு எடுக்காதீர்கள்.
அப்படி எடுத்த முடிவு உங்கள் வாழ்க்கையையே தனிமையாக மாற்றி விடலாம்.

"அண்ணன் இருக்கிறான், தம்பி இருக்கிறான்" என்று யாரையும் நம்பி ஓடாதீர்கள்.
உங்களுக்கு நீங்கள் தான் ஒரே நம்பிக்கை.

READ MORE DETAILS: 

நீங்கள் உண்மையில் மாதவிடாய் நிறுத்தத்தை (Menopause) கடந்து வருவதற்கான 9 முக்கிய அறிகுறிகள்.

எனது வளைதளத்துக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி

கருத்துரையிடுக

எனது வளைதளத்துக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி

Post a Comment (0)

புதியது பழையவை

ads

ads

-------------------------------------
--------------------------